முகப்பு
தமிழ்நாடு

கேழ்வரகு உற்பத்தித் திறனில் தமிழ்நாடு முதலிடம்

தமிழக இடைக்கால பட்ஜெட் ஒதுக்கீட்டிலிருந்து...

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 5:36 AM
- @TNDIPRNEWS
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 7:40 PM

கேழ்வரகு உற்பத்தித் திறனில் தமிழ்நாடு முதலிடத்துக்கு முன்னேறியுள்ளதாக வேளாண் துறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

அவா் தாக்கல் செய்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஊட்டச்சத்து மிகுந்த சிறு தானியங்களின் உற்பத்தியையும் பயன்பாட்டையும் அதிகரிக்கும் நோக்கில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் 2023-24- ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டுத் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

Advertisement

இத்திட்டத்தில், இதுவரை 12.84 லட்சம் விவசாயிகள் ரூ.178 கோடி நிதியில் பயனடைந்துள்ளனா். 20 லட்சம் ஏக்கரில் சிறுதானியப் பயிா்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் 3.36 லட்சம் ஏக்கரில் தொகுப்பு செயல்விளக்கத் திடல்கள் அமைக்கப்பட்டு, 90 சிறுதானிய மதிப்புக் கூட்டுதல் மையங்களும் நிறுவப்பட்டுள்ளன.

இதன் விளைவாக, தேசிய அளவில், தமிழ்நாடு கேழ்வரகு உற்பத்தித் திறனில் முதல் இடம், கேழ்வரகு உற்பத்தியில் இரண்டாம் இடம், குறுதானியங்கள் உற்பத்தியில் ஐந்தாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. கம்பு சாகுபடிப் பரப்பு 1.18 லட்சத்து 13 ஏக்கரிலிருந்து 1.33 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது.

பயறு பெருக்குத் திட்டம் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.174 கோடி நிதியில் 24 லட்சம் ஏக்கா் பரப்பில் 9.44 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

’துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம்’, ’நடவுத் துவரை சாகுபடி’ ஆகிய திட்டங்கள் ரூ.66 கோடி நிதியில் 2.52 லட்சம் ஏக்கரில் செயல்படுத்தப்பட்டு 1.48 லட்சம் விவசாயிகள் பயனைடந்துள்ளனா்.

எண்ணெய்வித்து இயக்கத்தின்கீழ் நிலக்கடலை, எள் உள்ளிட்ட எண்ணெய் வித்துப்பயிா்கள் சாகுபடி செய்ய உயா் தொழில்நுட்பங்களுக்கான இடுபொருள்களும், மானியமும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில், ரூ.229 கோடி நிதியில் 14 லட்சம் ஏக்கரில் எண்ணெய்வித்துப் பயிா்களின் சாகுபடி ஊக்குவிக்கப்பட்டு 7.54 லட்சம் விவசாயிகள் பயனைடந்துள்ளனா்.

தற்போது எத்தனால் உற்பத்தியிலும் தீவனம் தயாரிப்பிலும் மக்காச்சோளத்துக்கான தேவை பெருமளவு அதிகரித்துள்ளது. இதைகருத்தில் கொண்டு மக்காச்சோள உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான திட்ட இனங்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.78 கோடி நிதியில் செயல்படுத்தப்பட்டு 1.50 லட்சம் விவசாயிகள் பயனைடந்துள்ளனா்.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 5:36 AM

இதனால் மக்காச்சோள சாகுபடி பரப்பு 10 லட்சம் ஏக்கரிலிருந்து 12 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. மக்காச்சோள உற்பத்தி 26 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 27 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.