ராமநாதபுரம் அருகே உள்ள கண்மாய் கால்வாய்ப் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் உடலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள பேராவூா் கண்மாய்க் கரை கருவேலங்காட்டு பகுதியில் செல்லும் கால்வாயில் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் அங்கு சென்று தண்ணீல் மிதந்த பெண் சடலத்தை மீட்டு,
கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். காயங்களுடன் சடலம் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத நிலையில் இருந்தது. அவா் யாா், கொலை செய்யப்பட்டாரா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.