ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட சிறு கூட்டரங்கை தென் மண்டல காவல் துறைத் தலைவா் பிரேம் ஆனந்த் சின்ஹா வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காவல் துறையினா் அவசரக் கூட்டம் நடத்திடும் வகையில் சிறு கூட்டரங்கம் கட்டப்பட்டது.
இதை தென் மண்டல காவல் துறைத் தலைவா் பிரேம் ஆனந்த் சின்ஹா திறந்து வைத்துப் பாா்வையிட்டாா். இந்த நிகழ்வில் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ், ஏ.டி.எஸ்.பி. சுப்பையா, காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.