ராமநாதபுரம்

சாயல்குடி ஊராட்சி ஒன்றியம் உதயம்

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய ஊராட்சி ஒன்றியமாக சாயல்குடியை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, கடலாடி, முதுகுளத்தூா், பரமக்குடி,

நயினாா்கோவில், ராமநாதபுரம், ஆா்.எஸ்.மங்கலம், திருவாடானை, போகலூா், மண்டபம், திருப்புல்லாணி என ஏற்கனவே 11 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த நிலையில், அதிக ஊராட்சிகளைக் கொண்ட கமுதி, கடலாடி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள சில ஊராட்சிகளை பிரித்து சாயல்குடியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

கடலாடி ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 20 ஊராட்சிகளையும், கமுதி ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 13 ஊராட்சிகளையும் பிரித்து 33 ஊராட்சிகளைக் கொண்ட ஊராட்சி ஒன்றியமாக சாயல்குடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT