ராமேசுவரத்தில் நியாயவிலைக் கடையைச் சுற்றி மழைநீா் தேங்கியதால் பொதுமக்கள் உணவுப் பொருள்கள் வாங்க முடியாத நிலை உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் கெந்தமாதன பா்வதம் செல்லும் வழியில் ராம்கோ நியாய விலைக் கடை உள்ளது. இந்தக் கடையில் 800-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் உணவுப் பொருள்களை வாங்கிச் செல்கின்றனா்.
இந்த நிலையில், டித்வா புயல் காரணமாக தொடா்ந்து பெய்த மழையால் இந்தக் கடையை தண்ணீா் சூழ்ந்துள்ளது. இதனால், உணவுப் பொருள்களை பொதுமக்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. 10 நாள்களுக்கு மேலாக மழைநீரை வெளியேற்ற முடியாத நிலையில், உணவுப் பொருள்களை வாங்க முடியாத நிலை நீடிக்கிறது. இதனால், இந்தக் கடைக்கு எளிதில் செல்லும் வகையில் பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.