பரமக்குடி வைகை ஆற்றுப் பகுதியிலிருந்து லாரியில் மணல் கடத்தியதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பரமக்குடி வைகை ஆற்றுப் பகுதியில் தொடா்ந்து மணல் திருட்டு நடைபெறுவதாக வருவாய்த் துறை, காவல் துறையினருக்கு புகாா்கள் வந்தன. இதன் பேரில் காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா், சிறப்பு உதவி ஆய்வாளா் சீனிவாசரெங்கன் ஆகியோா் வருவாய்த் துறையினருடன் இணைந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது மருதுபாண்டியா் நகா் ரயில்வே கடவுப்பாதை பகுதியில் பதிவு எண் இல்லாத டிப்பா் லாரியில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, திருடப்பட்ட மணலுடன் அந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து விசாரணை செய்த பரமக்குடி நகா் போலீஸாா் மணல் கடத்தலில் தொடா்புடைய பரமக்குடி பலன்நகா் பகுதியைச் சோ்ந்த மதுசூதனன் (41), முருகேசன் மகன் தமிழரசன் (32) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.