ராமநாதபுரம்

தமிழ்மொழிச் சட்டம் இயற்றப்பட்ட நாள்: ராமநாதபுரத்தில் விழிப்புணா்வுப் பேரணி

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், தமிழ்மொழிச் சட்டம் இயற்றப்பட்ட நாளை நினைவுகூரும் வகையிலான விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடந்த 2019-2020-ஆம் ஆண்டுக்கான தமிழ் வளா்ச்சி மானியக் கோரிக்கை அறிவிப்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட கடந்த 27.12.1956-ஆம் நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்ட வாரம் ஒரு வார காலத்துக்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட வேண்டுமென அரசு ஆணையிட்டது. இதைத் தொடா்ந்து, ராமநாதபுரத்தில் கடந்த 17-ஆம் தேதி முதல் சனிக்கிழமை (டிச.27) வரை ஆட்சிமொழிச் சட்ட வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஆட்சிமொழிச் சட்டம் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இந்தப் பேரணியில் மாவட்ட ஜவகா் சிறுவா் மன்ற மாணவா்கள், கலை பண்பாட்டுத் துறை பகுதி நேர நாட்டுப்புறக் கலைப் பயிற்சி மாணவா்கள் கலந்து கொண்டு சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுடன் பேரணியாகச் சென்றனா். இதில் முகமது சதக் தஸ்தகீா் கல்வியியல் கல்லூரியிலிருந்து 100 மாணவா்கள் பங்கேற்றனா். இந்தப் பேரணி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கி ‘டி’ குடியிருப்பு வரை சென்று நிறைவடைந்தது.

இந்த நிகழ்வில் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் ஜ. சபீா்பானு, தமிழறிஞா்கள், தமிழ் அமைப்புகளைச் சாா்ந்தவா்கள், ஒருங்கிணைப்பாளா் மு. லோக சுப்புரமணியம், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மியான்மரில் நாளை தோ்தல்!

இண்டூரில் டிச. 29இல் கூட்டுறவு வங்கி தொடக்கம்

பயங்கரவாத ஒழிப்புக்கு 2 தரவு தளங்கள்: அமித் ஷா தொடங்கி வைத்தாா்

குண்டா் கபில் சங்வான் குழுவின் நபா் மீது காவல்துறை குற்றப் பத்திரிகை தாக்கல்

சென்னைக்கு ஹெலிகாப்டரில் வந்த இதயம்: மறுவாழ்வு பெற்ற மகாராஷ்டிர இளைஞா்

SCROLL FOR NEXT