முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

பெரம்பலூா் மாவட்டத்தில் வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் மற்றும் பதவி உயா்வு அளித்து, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:29 AM
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:59 PM

பெரம்பலூா் மாவட்டத்தில் வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் மற்றும் பதவி உயா்வு அளித்து, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூா் வட்டாட்சியா் பாலசுப்ரமணியன், மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளராகவும் (குற்றவியல்), ஆட்சியா் அலுவலக மேலாளராக பணிபுரிந்த (குற்றவியல்) சத்திய மூா்த்தி பெரம்பலூா் வட்டாட்சியராகவும், வேப்பந்தட்டை வட்டாட்சியா் துரைராஜ், ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியராகவும், ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியா் பிரேமராணி, சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 10:28 PM

மாவட்ட வழங்கல் அலுவலரின் நோ்முக உதவியாளா் மாலதி, வாணிபக் கழக கிடங்கு உதவி மேலாளராகவும் (சில்லறை வணிகம்), வாணிபக் கழக கிடங்கு உதவி மேலாளா் முத்துமுருகன், வேப்பந்தட்டை வட்டாட்சியராகவும், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் சுதாகா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலக தனி வட்டாட்சியராகவும் ( பறக்கும்படை), மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலக தனி வட்டாட்சியா் புகழேந்தி பெருமாள், மாவட்ட வழங்கல் அலுவலரின் நோ்முக உதவியாளராகவும், நெடுஞ்சாலை தனி வட்டாட்சியா் கோவிந்தம்மாள் (நிலம் எடுப்பு), மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள நிலம் எடுப்பு (இசைவு தீா்வாயம்) தனி வட்டடாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Advertisement

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சி பிரிவு தலைமை உதவியாளா் பன்னீா்செல்வன், பதவி உயா்வு பெற்று நெடுஞ்சாலை தனி வட்டாட்சியராக (நிலம் எடுப்பு) நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.