ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே தேவாலாயம் கட்ட எதிா்ப்புத் தெரிவித்து 3 கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
முதுகுளத்தூா் அருகேயுள்ள மருதகம், கீழப்பனையூா், எஸ்.ஆா்.என்.பழங்குளம் ஆகிய கிராமங்களில் 800-க்கும் மேற்பட்ட இந்துக்கள் வசிக்கின்றனா்.
இந்த நிலையில், மருதகம் கிராமத்தில் தனியாா் பட்டா நிலத்தில் மதுரை தென்னிந்திய திருச்சபையைச் சோ்ந்த ஆபிரகாம் தாமஸ் என்பவரது பெயரில் கிறிஸ்தவ தேவாலயம் அமைக்க முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தனா்.
மனுவில் 3 கிராமங்களிலும் இந்துக்கள் மட்டுமே உள்ள நிலையில், தேவாலயம் அமைக்க ஏற்பாடுகள் செய்வது தேவையற்ற மத மோதல்களை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால், மாவட்ட நிா்வாகம் தேவாலயம் அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது என அதில் குறிப்பிடப்பட்டது.