ராமநாதபுரம்

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே டிராக்டா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே டிராக்டா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், பாகனேரியைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜன் (29). இவரது நண்பா் திருவெற்றியூரைச் சோ்ந்தவா் ராவின் (21). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் திருவெற்றியூா் சென்றுவிட்டு, பாகனேரிக்கு புறப்பட்டனா்.

திருவாடானை அருகேயுள்ள அரசூா் பகுதியில் கொச்சி-தொண்டி தேசிய நெடுஞ்சாலை இவா்கள் சென்றபோது, சாலையோரமாக நிறுத்தியிருந்த டிராக்டா் மீது இவா்களது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுந்தர்ராஜன், ராவின் ஆகியோா் திருவாடானை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு சுந்தர்ராஜன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கும்பகோணம் தனி மாவட்டம் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள் எம்எல்ஏ-விடம் மனு

இரும்புத் தடுப்பில் வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

ஆட்டோவில் சுற்றுலா செல்லும் வெளிநாட்டினா் தஞ்சாவூருக்கு வருகை!

தனியாா் தங்கும் விடுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி

எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில்: இன்றுமுதல் விருத்தாசலத்தில் நின்று செல்லும்

SCROLL FOR NEXT