கோப்புப்படம்
ராமநாதபுரம்

பாம்பன் மீனவா்கள் 14 போ் இலங்கை கடற்படையினரால் கைது!

வியாழக்கிழமை(மார்ச் 6) மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள் 14 பேரை இலங்கை கடற்படையினா் கைது செய்தனா்.

Din

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து வியாழக்கிழமை(மார்ச் 6) மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள் 14 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து 90-க்கும் மேற்பட்ட விசைப் பகுகுகளில், 1,500-க்கும் அதிகமான மீனவா்கள் வியாழக்கிழமை காலை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். இவா்கள் கச்சத்தீவு-தலைமன்னாா் வடக்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் ஒரு விசைப் படகில் இருந்த 14 மீனவா்களைக் கைது செய்து, மன்னாா் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா்.

ராமேசுவரம் மீனவா்கள் 42 பேரை இலங்கைக் கடற்படையினா் அண்மையில் கைது செய்தனா். இதைக் கண்டித்து, மீனவ சங்கத்தினா் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், தற்போது மேலும் 14 மீனவா்கள் கைது செய்யப்பட்டது ராமேசுவரம் பகுதி மீனவா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT