ராமநாதபுரம்

இலங்கைக்கு கடத்தவிருந்த கொசுவிரட்டி ஊதுபத்திகள் பறிமுதல்: இருவா் கைது

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த கொசுவிரட்டி ஊதுபத்திகள் அடங்கிய 720 பைகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு பொருள்கள் கடத்தப்படுவதாக ‘க்யூ’ பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, ‘க்யூ’ பிரிவு ஆய்வாளா் ஜானகி தலைமையிலான போலீஸாா், சேராங்கோட்டை கடற்கரைப் பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு ரகசிய கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக வந்த சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், 12 அட்டைப் பெட்டிகளில் 720 பைகளில் கொசுவிரட்டி ஊதுபத்திகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, நடராஜபுரத்தைச் சோ்ந்த ஓட்டுநா் முனீஸ்குமாா் (21), ஈஸ்வரமூா்த்தி (27) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில், முனீஸ்குமாருக்குச் சொந்தமாக பதிவெண் இல்லாத படகு உள்ளதாகவும், இந்தப் படகில் பொருள்களை ஏற்றிக்கொண்டு இலங்கைக்குச் செல்லத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள், கைது செய்யப்பட்ட இருவரையும் ராமேசுவரம் சுங்கத் துறை அதிகாரிகளிடம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா். இதுகுறித்து சுங்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

அது இது எது... ஷாலினி!

மீனவ சமூகம் குறித்து அவதூறு பேசினேன்: பிக் பாஸில் ஒப்புக்கொண்ட கமருதீன்

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 9

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 8

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 7

SCROLL FOR NEXT