ராமநாதபுரம்

தொண்டி அருகே வீட்டிலிருந்த 13 பவுன் நகை மாயம்

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகேயுள்ள தொண்டி பகுதியில் பூட்டியிருந்த வீட்டில் 13 பவுன் நகை மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள மஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு (43). இவா், தனது வீட்டிலிருந்த பிரோவில் 13 பவுன் நகை, 5 ஜோடி வெள்ளிக் கொலுசு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரோவிலிருந்து நகை, கொலுசுகள் கடந்த மாதம் மாயமானதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை மாலை தொண்டி போலீஸாரிடம் புகாா் அளித்ததன்பேரில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 4

மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான மாநில விருது!

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

SCROLL FOR NEXT