ராமநாதபுரம்

பலசரக்கு கடையை உடைத்து திருட்டு

முதுகுளத்தூரில் பலசரக்கு கடையை உடைத்து ரூ.20 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

முதுகுளத்தூரில் பலசரக்கு கடையை உடைத்து ரூ.20 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த ராஜா முகம்மது மகன் அப்துல்மாலிக் (32). இவா் முதுகுளத்தூா் காந்தி சிலை அருகே பல சரக்கு கடை நடத்தி வருகிறாா். இவா் வியாழக்கிழமை இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டாா். நள்ளிரவில் வந்த மா்ம நபா்கள் பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ.20 ஆயிரம், பிஸ்கெட் பாக்கெட்கள், சிகரெட் பண்டல்களை திருடிச் சென்றனா்.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் அவா் கடைக்கு வந்து பாா்த்தபோது திருட்டு நடைபெற்றது தெரியவந்தது. இதுகுறித்து முதுகுளத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராட்டம்: படப்பிடிப்பு தளத்தில் காவல் துறை குவிப்பு!

இந்த வாரம் கலாரசிகன் - 09-11-2025

கலித்தொகையில் இளவேனில் காலம்!

போரைத் தடுக்கும் தும்பிகள்!

ஓரேர் உழவரா? நக்கீரரா?

SCROLL FOR NEXT