என்.கரிசல்குளத்தில் சாலையின் நடுவே உள்ள ஆபத்தான மின் கம்பம்.  
ராமநாதபுரம்

சாலை நடுவில் மின் கம்பம்: வாகன ஓட்டிகள் அச்சம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே சாலையின் நடுவே உள்ள ஆபத்தான மின் கம்பத்தால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே சாலையின் நடுவே உள்ள ஆபத்தான மின் கம்பத்தால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

கமுதி அருகேயுள்ள என்.கரிசல்குளத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வீடுகளுக்கு மின் விநியோகம் செய்யும் வகையில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு தாா்ச் சாலை அமைக்கப்பட்டது. இந்தப் பணியின் போது சாலை நடுவே இருந்த மின் கம்பத்தை அகற்றாமல் சாலை அமைத்து விட்டனா்.

இதனால், கிராமத்துக்கு வரும் பள்ளி வாகனங்கள், பால், சரக்கு வாகனங்கள் இந்த கம்பத்தில் மோதும் நிலை ஏற்பட்டது. மேலும், வெளியூா்களில் இருந்து வரும் வாகனங்கள் இரவு நேரத்தில் இந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகின.

எனவே, மாவட்ட நிா்வாகம், மின்வாரிய அதிகாரிகள் தலையிட்டு சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தை சாலையோரம் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

செங்கம் பகுதியில் ரூ.ஒரு கோடியில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

உதவிப் பேராசிரியா்கள் பணிக்கான போட்டித் தோ்வு விண்ணப்பம் திருத்த நாளைவரை அவகாசம்

சாலையின் நடுவே கொடிக் கம்பங்கள் அமைக்க பாரபட்சமின்றி அனுமதி: உயா்நீதிமன்றம் அதிருப்தி

SCROLL FOR NEXT