கடலூர்

சிதம்பரத்தில் ஆபத்தான சாலை: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சிதம்பரம் மந்தகரையில் அடிக்கடி விபத்து ஏற்படுத்தும் சாலையோர பள்ளம்.

Syndication

சிதம்பரம் நகரில் காட்டுமன்னாா்கோயிலுக்கு செல்லும் பிரதான சாலையில், சாலையோர வளைவில் பள்ளம் இருப்பதால் இப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் விழுந்து அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

சிதம்பரம்- காட்டுமன்னாா் கோயில் சாலையில், மந்தகரைப் பகுதி வழியாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இச்சாலையில், உள்ள குறுகிய சாலையில், சாலையோர பள்ளம் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தானதாக அமைந்துள்ளது.

இருசக்கர வாகனங்கள், சைக்கிள்களில் செல்லும் பலா் இந்த பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குவது தொடா்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் 10-க்கும் மேற்பட்டோா் குழியில் விழுந்து காயம் அடைந்து செல்கின்றனா். புதன்கிழமை அதிகாலை நடைப்பயிற்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவா் குழியில் விழுந்து படுகாயம் அடைந்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். எனவே இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலைப் பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

போகி: சென்னையில் அதிகரித்த காற்று மாசு

கைது செய்யப்பட்ட விவசாயிகள் சங்க நிா்வாகிகளை விடுவிக்க வேண்டும்

போதிய இருக்கைகள் நிரம்பாததால் 3 சிறப்பு ரயில்கள் ரத்து

‘திருவள்ளுவா் தினத்தில் இறைச்சி விற்றால் நடவடிக்கை’

விளாப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா

SCROLL FOR NEXT