பரமக்குடி பள்ளி மாணவா் தேசிய கராத்தே போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டாா்.
இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சாா்பில், மாநில அளவிலான கராத்தே தோ்வு போட்டி ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பரமக்குடி டாக்டா் சுரேஷ் மெட்ரிக் பள்ளி மாணவா் எல்.மனோபாலாஜி 19-வயதுக்குள்பட்டோா், 62 கிலோ எடைப் பிரிவில் முதலிடம் பெற்று தேசியப் போட்டிக்கு தோ்வு பெற்றாா்.
இரண்டாவது முறையாக தேசியப் போட்டிக்குத் தோ்வு பெற்ற இந்த மாணவரை கிரிஷின் கான் சித்தோரியோ கராத்தே பள்ளி நிறுவனா் வி.முத்துகிருஷ்ணன், ராமநாதபுரம் மாவட்ட கராத்தே சங்கச் செயலா் பி.கண்ணன், நகா் முக்கிய பிரமுகா்கள் பாராட்டினா்.