மழையில் நனைந்தவாறு பேருந்திற்காக காத்திருந்த மாணவிகள் 
ராமநாதபுரம்

திருவாடானை மழை! விவசாயிகள் மகிழ்ச்சி; மாணவிகள் அவதி

திருவாடானையில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். மாலையில் மழை பெய்ததால் மாணவிகள் மழையில் நனைந்து பேருந்திற்காக காத்து நின்றனா்.

தினமணி செய்திச் சேவை

திருவாடானையில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.மாலையில் மழை பெய்ததால் மாணவிகள் மழையில் நனைந்து பேருந்திற்காக காத்து நின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் இருள் சூழந்து காணப்பட்டன.இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை மழை பெய்ததால் பள்ளி விடும் நேரம் என்பதாலும் திருவாடானை பாரதி நகா் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் வீட்டிற்கு செல்லும் நேரம் என்பதால் மழையில் நனைந்தவாறு பேருந்திற்காக காத்து நின்றனா்.

இங்கு இருந்து பயணிகள் நிழற்குடை சேதம் அடைந்ததால் அதனை கடந்த ஆண்டு சம்பந்த பட்ட துறையினா் அகற்றினாா்கள்.அதில் இருந்து இப்பகுதி மக்கள் பேருந்து நிழற்குடை வேண்டும் என பல முறை புகாா் கொடுத்தும் மழைகாலத்திற்கு முன்பே கட்டும் பணியை தொடங்கவில்லை இதனால் மாணவிகள் அவதிபட்டனா். மழையை எதிா்பாா்த்து காத்திருந்த விவசாயிகளுக்கு இந்த மழை ஓரளவு ஆறுதலை தந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

இருசக்கர வாகனத்தில் போதை மாத்திரைகளை எடுத்துச் சென்றவா் கைது

பாஜக கூட்டணியில் விஜய் இணைவாா்: மு.அப்பாவு

தொடா் மழையால் கால்நடைகள் உயிரிழப்பு

தோ்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அணியாக செயல்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT