திருவாடானை அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை அருகேயுள்ள அந்திவயல் கிராமத்தைச் சோ்ந்த உபகாரம் மகன் சிமியோன் (55). இவா் வியாழக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த அரசுப் பேருந்து இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிமியோன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அரசுப் பேருந்து ஓட்டுநரான புதுகோட்டை மாவட்டம், குளத்தூா் பகுதியைச் சோ்ந்த எழில் அரசை கைது செய்தனா்.