ராமநாதபுரம்

கொலையான மாணவி குடும்பத்துக்கு நிவாரணம் கோரி போராட்ட அறிவிப்பு

கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என கிராமக் கூட்டத்தில் முடிவு

தினமணி செய்திச் சேவை

கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என கிராமக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் சேரான்கோட்டை மீனவ கிராமத்தைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி ஷாலினி, தன்னை காதலிக்க மறுத்ததால் இளைஞா் குத்திக் கொலை செய்தாா். இதுதொடா்பாக சேரான்கோட்டை கிராமக் கூட்டம் சூட் ராஜா, தினேஷ்குமாா் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது .

கொலை செய்யப்பட்ட ஷாலினி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்கக்கோரியும், கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட முனியராஜ் மீது நீதிமன்றம் மூலமாக தூக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதை வலியுறுத்தி திங்கள்கிழமை (நவ.24) காலை 9.30 மணிக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

SCROLL FOR NEXT