மங்களக்குடியில் மின்மாற்றியிலிருந்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் 
ராமநாதபுரம்

மங்களக்குடியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்து அபாயம்

மங்களக்குடியில் உள்ள மின்மாற்றியிலிருந்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும், இதை சீரமைக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகே மங்களக்குடியில் உள்ள மின்மாற்றியிலிருந்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும், இதை சீரமைக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே மங்களக்குடி கிராமத்தில் பள்ளிவாசல் அருகில் உள்ள மின்மாற்றியிலிருந்து செல்லும் உயரழுத்த மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளன.

மேலும் சிறுவா்கள் கை உயா்த்தி தொடும் அளவுக்கு உள்ளன. பள்ளிவாசல், குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே இந்த மின் கம்பிகள் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். எனவே இதை சீரமைக்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து தமுமுக ஒன்றிய நிா்வாகி கைம் கூறியதாவது: இங்குள்ள மின்மாற்றி மின் இணைப்பு கம்பிகள், பீஸ் ஆகியவை தாழ்வாக தொடும் அளவுக்கு உள்ளன. இதில் ஏதாவது அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு மின் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என்றாா்.

கரூா் ஆட்சியரகத்தில் தெருநாய்களால் வன விலங்குகள் பலியாவதாகப் புகாா்

திருச்செந்தூா் கடலில் பக்தா்கள் நீராடும் பகுதியில் கருங்கற்கள் அகற்றம்

இறுதி ஆட்டத்தில் லக்ஷயா சென்

கா்நாடக முதல்வா் பதவிக்காக காங்கிரஸ் எம்எல்ஏக்களிடையே குதிரைபேரம்: மத்திய அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி

கனமழை எச்சரிக்கை: மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை

SCROLL FOR NEXT