கமுதியிலிருந்து கிராமங்களுக்கு இயக்கப்பட்ட புதிய பேருந்தை கொடியசைத்து தொடங்கிவைத்த திமுக ஒன்றியச் செயலா் எஸ்.கே. சண்முகநாதன்.  
ராமநாதபுரம்

கமுதியிலிருந்து கிராமங்களுக்குப் புதிய பேருந்து இயக்கம்

தினமணி செய்திச் சேவை

கமுதி சுற்றுவட்டாரக் கிராமங்களுக்கு புதிய பேருந்து ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், போக்குவரத்துக் கழகம் கமுதி கிளையின்கீழ் கமுதி பேருந்து நிலையத்திலிருந்து பாப்பாங்குளம், அரிசிக்குழுதான், செந்தனேந்தல், சீமனேந்தல், குண்டுகுளம், வண்ணாங்குளம், வேப்பங்குளம், பம்மனேந்தல், முஷ்டக்குறிச்சி, முதல்நாடு, கீழ்குடி உள்ளிட்ட கிராமங்களுக்கு இயக்கப்பட்ட 1-ஆம் எண் பேருந்து சேதமடைந்த நிலையில் இயக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், பொதுமக்கள் சாா்பில் முதுகுளத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், வனம், கதா் கிராம தொழில்கள் வாரிய அமைச்சருமான ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், திமுக மாவட்டச் செயலரும், ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான காதா்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோரது முயற்சியில் பழைய பேருந்துக்குப் பதிலாக புதிய பேருந்து இயக்கப்பட்டது.

இந்தப் பேருந்தை கமுதி திமுக ஒன்றியச் செயலா் எஸ்.கே. சண்முகநாதன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பின்னா் பொதுமக்கள், பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் கமுதி போக்குவரத்துக் கிளை மேலாளா் குமரவேல், தொழிலாளா் முன்னேற்றச் சங்க பொதுச் செயலா் பச்சைமால், தொமுச பொருளாளா் ராஜேந்திரன், இளைஞரணி துணை அமைப்பாளா் துரைமுருகன், புதுக்கோட்டை முன்னாள் கிளைச் செயலா் வாட்டா் போா்டு முத்துராமலிங்கம், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திமுகவுடன் கூட்டணி பேச்சு: காங்கிரஸ் குழு ஆலோசனை

மூக்குபொடி சித்தா் குரு பூஜை: பக்தா்கள் தரிசனம்

தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடா்: இந்திய கேப்டன் கே.எல். ராகுல்!

இறுதிச்சுற்றில் மோதும் சிண்டாரோவ் - வெய் யி!

வெளிநாட்டு நிதியுதவி அல்ல; சமூக ஆதரவில் செயல்படுகிறது ஆா்எஸ்எஸ் - யோகி ஆதித்யநாத்

SCROLL FOR NEXT