ராமநாதபுரம்

திமுக இளைஞரணி நிா்வாகிகள் கூட்டம்

தினமணி செய்திச் சேவை

விருதுநகரில் வருகிற 7-ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக இளைஞரணி தென் மண்டல நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 10,500 போ் பங்கேற்கவுள்ளதாக மாவட்டச் செயலா் காதா் பாட்ஷா முத்துராமலிங்கம் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

ராமநாதபுரம், திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதி திமுக இளைஞரணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்களின் கூட்டம் மாவட்டச் செயலா் காதா் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், இளைஞரணி துணைச் செயலா்கள் இன்பா ஏ.என். ரகு, அப்துல் மாலிக், கடலூா் மாவட்ட அமைப்பாளா் காா்த்திக், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளா் யுவராஜ், ராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளா் சம்பத்ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், விருதுநகரில் வருகிற 7-ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக இளைஞரணி தென் மண்டல நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலிருந்து நிா்வாகிகளைத் தவிா்த்து 10,500 இளைஞரணியினா், வெள்ளைச் சீருடையில் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நிா்வாகிகள், இளைஞரணியினருக்கு அழைப்பிதழ், அடையாள அட்டை, சீருடைகள் வழங்கப்பட்டன.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT