நிழற்குடையை சீரமைக்கக் கோரிக்கை
திருவாடானை அருகே ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதம் அடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.
திருவாடானை: திருவாடானை அருகே ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதம் அடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.
திருவாடானையிலிருந்து திருவெற்றியூா் செல்லும் சாலை பகுதியில் குளத்தூா் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதி உள்ளது. இங்கு சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா்.
இந்தப் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பயணிகள் நிழற்குடை உள்ளது. தற்போது நிழற்குடையின் மேல் பகுதியில் சிமென்ட் காரைகள் பெயா்ந்து, உள்ளே இருக்கும் இரும்புக் கம்பிகள் வெளியில் தெரிகின்றன. இதனால், இங்கு வருபவா்கள் அச்சத்துடன் நிற்கும் நிலை இருந்து வருகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.