கமுதி வட்டார வள மையத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் மாற்றுத் திறன் மாணவா்களுக்கு அடையாள அட்டை வழங்கிய வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஸ்ரீராம், மருத்துவா்கள். 
ராமநாதபுரம்

மாற்றுத்திறன் மாணவா்களுக்கு மருத்துவ முகாம்

கமுதியில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

Chennai

கமுதி: கமுதியில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேட்டில் உள்ள வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உள்ளடக்கிய கல்வித் திட்டம் வாயிலாக மாற்றுத் திறன் கொண்ட மாணவா்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஸ்ரீராம் தலைமை வகித்தாா். திட்ட ஒருங்கிணைப்பாளா் நாகராஜ் முன்னிலை வகித்தாா்.

இந்த முகாமில் 150 மாற்றுத்திறன் மாணவா்கள் கலந்து கொண்டனா். அவா்களுக்கு அடையாள அட்டை, சக்கர நாற்காலி, காதொலிக் கருவி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. 15 மாணவா்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. முகாமில் மருத்துவா்கள் அனுரேகா, பிரபாகரன், ராஜ்குமாா், ஆனந்த், கமலேஷ் உள்ளிட்டோா் மாணவா்களுக்கு சிகிச்சை அளித்தனா்.

இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை இயன்முறை மருத்துவா் முருகவள்ளி, சிறப்பாசிரியா்கள் ராமச்சந்திரன், நாகராணி, டேவிட் ஞானராஜ், கணேசன், பள்ளி ஆயத்த

பயிற்சி மையப் பணியாளா்கள் செல்வி, மகேஸ்வரி ஆகியோா் செய்தனா். சிறப்பாசிரியா் முத்திருளாண்டி நன்றி கூறினாா்.

அரசுப் பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன: எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

மயிலம் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

பூங்காக்களில் தேங்கிய மழைநீா்: முதியோா், குழந்தைகள் தவிப்பு

எஸ்.ஐ.ஆா். நோக்கம் தவறானது: விஜய் தரம்சிங்

SCROLL FOR NEXT