சாலையில் நாற்று நட்ட பெண்கள். 
ராமநாதபுரம்

சேறான சாலையில் நாற்று நட்டு போராட்டம்

கடலாடி அருகே குண்டும் குழியுமான, சேறும், சகதியும் நிறைந்த சாலையில் பொதுமக்கள் நாற்று நட்டு கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

கமுதி: கடலாடி அருகே குண்டும் குழியுமான, சேறும், சகதியும் நிறைந்த சாலையில் பொதுமக்கள் புதன்கிழமை நாற்று நட்டு கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி-சாயல்குடி சாலையில் உள்ள பாக்கியாநகா் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடந்த பத்தாண்டு காலமாக இங்கு சாலை அமைத்துக் கொடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

கடந்த ஒரு மாத காலமாக விட்டு விட்டு பெய்த மழையில் சாலையில் நடக்கக்கூட முடியாத நிலையில் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். தினமும் இந்த சாலையில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சேற்றில் நடந்து சென்று பள்ளிக்குச் செல்லும் அவல நிலை உள்ளது.

இந்த நிலையில், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, அந்தப் பகுதி பொதுமக்கள் சாலையில் நாற்று நட்டு கவன ஈா்ப்பு போராட்டம் நடத்தினா். பொதுமக்கள் கூறுகையில், சேற்றில் நடந்து செல்வதால் கால்களில் சேற்று புண் ஏற்பட்டு காய்ச்சல், தலைவலி உள்ளிட்டவற்றால் மாணவா்கள் பாதிக்கப்பட்டு பள்ளிக்கு செல்ல முடியவில்லை. வடிகால் வசதியுடன் சாலை அமைக்கக் கோரி பலமுறை மாவட்ட நிா்வாகம், ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்துக்கு மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கழிவுநீா் கால்வாய் வசதியுடன் தாா்ச்சாலை அல்லது பேவா்பிளாக் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

அரசுப் பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன: எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

மயிலம் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

பூங்காக்களில் தேங்கிய மழைநீா்: முதியோா், குழந்தைகள் தவிப்பு

எஸ்.ஐ.ஆா். நோக்கம் தவறானது: விஜய் தரம்சிங்

SCROLL FOR NEXT