முதல்வரின் அண்ணா பதக்கம் பெற்றவா்கள் எஸ்.பி. வாழ்த்து
ராமநாதபுரம் சிறப்பு புலனாய்வு பிரிவில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழ்நாடு முதல்வரின் அண்ணா பதக்கம், வெகுமதி பெற்ற காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷை சந்தித்து புதன்கிழமை வாழ்த்துப் பெற்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2024-25 ஆண்டில் சிறப்பாக பணியாற்றிமைக்காக தமிழ்நாடு முதல்வா் பதக்கம், வெகுமதி பெற்ற சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளா் ராஜேஸ்கண்ணன், காவல் உதவி ஆய்வாளா்கள் ரமேஷ், ராம்குமாா், நுண்ணறிவுப்பதக்கம் பெற்ற தனிப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.