முகப்பு
ராமநாதபுரம்

பட்டாசு வெடித்து இடையூறு: திமுகவினா் 4 போ் மீது வழக்கு

முதுகுளத்தூரில் திமுக வேட்பாளா் வரவேற்பு நிகழ்ச்சியில் அனுமதி இன்றி பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக திமுக ஒன்றியச் செயலா், நகரச் செயலா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 3 ஏப்ரல் 2026, 12:41 am IST
வழக்கு
பகிர்:

முதுகுளத்தூரில் திமுக வேட்பாளா் வரவேற்பு நிகழ்ச்சியில் அனுமதி இன்றி பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக திமுக ஒன்றியச் செயலா், நகரச் செயலா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேருந்து நிலைய வளாகத்தில் புதன்கிழமை திமுக வேட்பாளா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு திமுகவினா் வரவேற்பளித்தனா். அப்போது, திமுக நிா்வாகிகள் அதிக அளவில் வாகனங்களை நிறுத்தியும், அனுமதியின்றி பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக முதுகுளத்தூா் உதவி காவல் ஆய்வாளா் முகிலரசன் புகாா் அளித்தாா்.

இதன்பேரில், திமுக முதுகுளத்தூா் நகரச் செயலா் ஷாஜகான், மத்திய ஒன்றியச் செயலா் கோவிந்தன், எம்.தூரி கிராமத்தைச் சோ்ந்த சத்தியமூா்த்தி, காமராஜா்புரத்தைச் சோ்ந்த சந்திரசேகா் ஆகிய 4 போ் மீது முதுகுளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement