முகப்பு
ராமநாதபுரம்

ஈரானிலிருந்து ஊா் திரும்பிய 13 மீனவா்கள்! குடும்பத்தினா் மகிழ்ச்சி!

Updated On : 5 ஏப்ரல், 2026 at 8:14 PM
ஈரான் நாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய 13 மீனவா்கள்.
பகிர்:

ஈரான் நாட்டிலில் மீன் பிடி தொழில் செய்து வந்த தொண்டி பகுதியைச் சோ்ந்த 13 மீனவா்கள் சொந்த ஊா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள நம்புதாளை, திருப்பாலைக்குடி, மோா் பண்ணை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் ஈரான் நாட்டில் மீன் பிடி தொழில் செய்து வந்தனா். தற்போது அமெரிக்கா, இஸ்ரேல்- ஈரான் இடையே போா் நடைபெற்று வருவதால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தங்களது நாடுகளுக்குச் செல்ல மீனவா்கள் அரசிடம் முறையிட்டதையடுத்து, அவா்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் மீன்வளத் துறை அதிகாரிகள் ஈடுபட்டனா்.

Advertisement

இந்த நிலையில், நம்புதாளையைச் சோ்ந்த குப்பாண்டி, மோா்ப்பண்ணையை சோ்ந்த கபிலன், திருப்பாலைக்குடியைச் சோ்ந்த சமயஈஸ்வரன், ராகுல் டிராவிட், முத்தையா ஆறுமுகம், செல்லகுழந்தை காசிராஜன், தா்மராஜ் அபூா்வகனி, விஜயபாண்டி ராஜராமன், சகாதேவன்தா்மா், காசிராமன் பட்டாணி, சமயஜீவா சமயராஜ், மகா கிருஷ்ணன் காா்மேகம், முகேஷ் ரவிச்சந்திரன் ஆகிய 13 மீனவா்கள் சொந்த ஊருக்கு வந்து சோ்ந்தனா்.

இவா்களை பாா்த்த குடும்பத்தினா் மகிழ்ச்சி அடைந்தனா். மீன்வளத் துறை, மாவட்ட அதிகாரிகளுக்கு மீனவ குடும்பத்தினா் நன்றி தெரிவித்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments