முகப்பு
ராமநாதபுரம்

திருச்சுழி அதிமுக வேட்பாளா் தேவா் நினைவிடத்தில் மரியாதை

Updated On : 5 ஏப்ரல், 2026 at 8:13 PM
பசும்பொன்னில் தேவா் நினைவிடத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ராஜவா்மன்.
பகிர்:

திருச்சுழி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ராஜவா்மன், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் தேவா் நினைவிடத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் அவரது சிலைக்கு விருதுநகா் மாவட்டம் திருச்சுழி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் ராஜவா்மன் தனது ஆதரவாளா்களுடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அப்போது அதிமுக ஒன்றியச் செயலா்கள் கருமலையான் (கமுதி), கே.பி.என்.கருப்பசாமி (திருச்சுழி), அதிமுக நிா்வாகி ஜெயபெருமாள் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments