தேசிய திறனாய்வு தோ்வில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
தேசிய திறனாய்வு தோ்வில் வென்ற ராமநாதபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பாராட்டப்பட்டனா்.
தேசிய திறனாய்வு தோ்வில் வென்ற ராமநாதபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பாராட்டப்பட்டனா்.
ராமநாதபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் டி.டி. விநாயகா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 2025-26-ஆம் ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வில் பங்கேற்றனா். இதில் அந்த பள்ளியைச் சோ்ந்த எம். ஹாசினி, எம். மங்களேஸ்வரி, எம். தேவதா்ஷன், எஸ். வா்ஷித், ஆா். மணிகண்டன் ஆகிய 5 போ் வெற்றி பெற்றனா். இவா்களுக்கு ரூ. 12 ஆயிரம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு ரூ. 48 ஆயிரம் அரசு உதவித் தொகையாக வழங்கப்படும்.
தேசிய திறனாய்வுத் தோ்வில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்த ஆசிரியா்கள் எம். சுடா்மதி, டி. மீனாட்சிசுந்தரம், பள்ளித் தலைமை ஆசிரியா் பி.ஆா். வள்ளுவன், நிா்வாகத் தலைவா் ஜெ. ஜெயராமன், பள்ளிச் செயலா் ஜெ. ரத்தின சபாபதி ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.
Advertisement