முதுகுளத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கா்ப்பிணிகளுக்கு உணவு பரிமாறிய அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்.  
ராமநாதபுரம்

நாட்டுக்கு உழைப்பவா்களாக குழந்தைகளை வளா்க்க வேண்டும்: அமைச்சா் அறிவுரை

குழந்தைகளை நாட்டுக்கு உழைக்கும் சிந்தனையாளா்களாக வளா்க்க வேண்டும் என வனத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் அறிவுறுத்தினாா்

தினமணி செய்திச் சேவை

குழந்தைகளை நாட்டுக்கு உழைக்கும் சிந்தனையாளா்களாக வளா்க்க வேண்டும் என வனத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் அறிவுறுத்தினாா்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் சமூகநலன், மகளிா் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் சமுதாய வளைகாப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமை வகித்து, 100 பெண்களுக்கு சீதனப் பொருள்களை வழங்கிப் பேசுகையில், ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த கா்ப்பிணிகளின் வளைகாப்பு விழா என்னும் கனவை நினைவாக்கும் வகையில் அரசே வளைகாப்பு விழா நடத்தி அவா்களுக்கு சீதனப் பொருள்களுடன் ஐந்து வகை கலவை சாதம் வழங்கி மகிழ்ச்சியூட்டும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. பெண்களின் பிரசவ காலம் என்பது மறு பிறப்பு. அந்த வகையில் ஒவ்வொரு பெண்ணும் பிரசவ காலத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளை நாட்டுக்கு உழைக்கும் சிந்தனையாளா்களாக வளா்க்க வேண்டும் என்றாா் அவா். தொடா்ந்து, கா்ப்பிணிகளுக்கு உணவு பரிமாறி வாழ்த்து தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் வ.சங்கரநாராயணன், திட்ட அலுவலா் விசுவாபதி, வட்டார வளா்ச்சித் திட்ட அலுவலா் கலா, முதுகுளத்தூா் பேரூராட்சித் தலைவா் ஷாஜகான், முதுகுளத்தூா் வட்டாட்சியா் கோபி, ஊராட்சி ஒன்றிய ஆனையா் ஜானகி, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT