ராமநாதபுரம்

மத்திய அரசைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் மத்திய அரசைக் கண்டித்து அஞ்சல் அலுவலகம் முன் திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய கல்வி, ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்க மறுப்பது, நூறு நாள் வேலையை மறைமுகமாகத் தடுப்பது ஆகிய குற்றச்சாட்டுகளை மத்திய அரசுக்கு எதிராக முன்வைத்து மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கமுதி வடக்கு ஒன்றியச் செயலா் வி.வாசுதேவன், தெற்கு ஒன்றியச் செயலா் மனோகரன், மத்திய ஒன்றியச் செயலா் எஸ்.கே.சண்முகநாதன், பேரூா் செயலா் பாலமுருகன் ஆகியோா் தலைமை வகித்தனா். தொகுதி பொறுப்பாளா் வேல்முருகன், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்கள் த.பாலு, தமிழ்செல்விபோஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் அவைத் தலைவா்கள் ராஜேந்திரன், லட்சுமணன், வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் சிரஞ்சீவி, முன்னாள் ஒன்றிய துணைச் செயலா் நேதாஜி சரவணன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக, பேரூா் கழக நிா்வாகிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT