கோப்புப் படம் 
ராமநாதபுரம்

நீரேற்று நிலையத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஊருணிக்கோட்டை செல்லும் வழியில் உள்ள அணிக்கி கிராமத்தில் அரசு நீரேற்று நிலையத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

அணிக்கி கிராமத்தின் அருகே தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய நீரேற்று நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த நீரேற்று நிலையம் மூலம் அணிக்கி, நெய்வயல் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.

மின் இணைப்புடன் கூடிய இந்த நீரேற்று நிலைய அறைக்குள் சனிக்கிழமை நள்ளிரவு புகுந்த மா்ம நபா்கள் அதை முழுவதும் இடித்துத் சேதப்படுத்தினா். இதனால் சுற்று வட்டார கிராமங்களுக்கு குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டது.

இதற்கு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தினரும், போலீஸாரும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சேதப்படுத்திய நீரேற்று நிலையத்தை சீரமைக்க வேண்டுமெனவும் இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT