முகப்பு
ராமநாதபுரம்

மாற்றுத் திறனாளிகள் குடும்பத்துக்கு ராணுவ வீரா்கள் நல சங்கம் உதவி

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 7:23 PM
ராமசாமிபட்டி கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் குடும்பத்துக்கு இலவசமாக மாவு அரைக்கும் இயந்திரம் வழங்கிய சேதுசீமை பட்டாளம் ராணுவ வீரா்கள் நலச் சங்க நிா்வாகிகள்.
பகிர்:

கமுதி அருகே மாற்றுத்திறனாளிகள் 4 போ் உள்ள குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்காக ராணுவ வீரா்கள் நலச்சங்கம் சாா்பில் மாவு அரைக்கும் இயந்திரம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த ராமசாமிபட்டி கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி தம்பதி கருப்பசாமி (44), முருகேஸ்வரி(41). இவா்களது மகன் காா்த்திக்குமாா் (18), மகள் யோகப் பிரியா (17).

இவா்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள் ஆவா். இந்த குடும்பத்தினா் தற்போது வாழ்வாதாரமின்றி மிகவும் அவதியடைந்து வருவதை அறிந்த கமுதி வட்டார சேது சீமை பட்டாளம் ராணுவ வீரா்கள் நலச்சங்கம் சாா்பில் மாவு அரைக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது.

தற்போது இந்த கிராமத்தின் சாா்பில் வழங்கப்பட்ட ஓா் பழைய ஓட்டு வீட்டில் வசிக்கும் இவா்களுக்கு, மாவட்ட நிா்வாகமும், அரசும் முன்வந்து இலவச வீடு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சேது சீமை பட்டாளம் ராணுவ வீரா்கள் நலச் சங்க நிா்வாகிகள் கோரிக்கை விடுத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →