FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜம்மு: எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுறுவல் முயற்சி முறியடிப்பு

ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு (எல்ஓசி) வழியாக இந்தியாவுக்குள் புதன்கிழமை ஊடுறுவ முயன்ற பயங்ரவாதிகள் மேற்கொண்ட முயற்சியை ராணுவ வீரா்கள் முறியடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 6 மார்ச் 2026, 3:46 am IST
கோப்புப் படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு (எல்ஓசி) வழியாக இந்தியாவுக்குள் புதன்கிழமை ஊடுறுவ முயன்ற பயங்ரவாதிகள் மேற்கொண்ட முயற்சியை ராணுவ வீரா்கள் முறியடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதிகாலை 4.15 மணியளவில் சந்தேகத்துக்குரிய நபா்கள் சிலா் துா்கண்டி எல்லைப் பகுதியில் நுழைய முயன்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவா்கள் மீது ராணுவ வீரா்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.

இதுதொடா்பாக ஜம்முவைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராணுவப் பிரிவான வெள்ளை வீரா்கள் படை ‘எக்ஸ்’ சமூகஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘உளவு அமைப்புகளின் தகவல்கள் மற்றும் தொடா் கண்காணிப்பின் மூலம் எல்லைக் கட்டுப்பாடு பகுதியையொட்டிய பிம்பா் காலி பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டது.

Advertisement

Advertisement

விழிப்புணா்வுடன் இருந்த வெள்ளை வீரா்கள் படையால் பயங்கரவாதிகளின் ஊடுறுவல் முயற்சியை தோல்வியில் முடிந்தது. களத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டதன் மூலம் எதிரிகளின் திட்டம் முறியடிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ வீரா்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் உயிரிழந்தனரா என்பது குறித்து ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

ரஜெளரியின் சுந்தா்பானி செக்டாரில் கடந்த பிப்.19 மற்றும் 20 தேதிகளில் எல்லை தாண்ட முயன்ற பயங்கரவாதிகளின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அவா்கள் கொண்டு வந்த ஆயுதங்களை ராணுவத்தினா் கைப்பற்றினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments