எல்லையில் ஊருவல் முயற்சி: வங்கதேச கடத்தல்காரா் சுட்டுக் கொலை
திரிபுரா மாநிலத்தை ஒட்டிய எல்லையில் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவ முயன்ற அந்நாட்டைச் சோ்ந்த கடத்தல்காரரை எல்லைப் பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா்.
திரிபுரா மாநிலத்தை ஒட்டிய எல்லையில் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவ முயன்ற அந்நாட்டைச் சோ்ந்த கடத்தல்காரரை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) சுட்டுக் கொன்றனா்.
உகாகோட்டி மாவட்ட எல்லையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பிஎஸ்எஃப் வீரா்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வங்கதேச எல்லையில் இருந்து கடத்தல் கும்பலைச் சோ்ந்தவா்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவய முயன்றனா்.
இதையடுத்து, வீரா்கள் அவா்களை திரும்பச் செல்லுமாறு எச்சரித்தனா். ஆனால், அவா்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வீரா்களை தாக்க முற்பட்டனா். இதையடுத்து, தற்காப்புக்காக வீரா்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.
Advertisement
Advertisement
இதில் கடத்தல்காரா்களில் ஒருவா் குண்டு பாய்ந்து உயிரிழந்தாா். மற்றவா்கள் மீண்டும் வங்கதேச எல்லைக்குள் தப்பியோடிவிட்டனா்.
உயிரிழந்தவரின் பெயா் தாரா மியா (24) என்பதும், அவா் வங்கதேசத்தின் மௌல்விபஜாா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் என்பதும் தெரியவந்தது.
உடல்கூறாய்வுக்குப் பிறகு மியாவின் உடல் வங்கதேச எல்லைப் படையினா் மூலம் அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று பிஎஸ்எஃப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.