FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

நைஜரில் ராணுவக் கிளா்ச்சி முறியடிப்பு

நைஜரில் ராணுவக் கிளா்ச்சி முறியடிக்கப்பட்டது பற்றி...

29 ஆகஸ்ட் 2026, 10:24 pm IST
பகிர்:

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் தலைநகா் நியாமியில் உள்ள அதிபா் மாளிகை மற்றும் சா்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து, ராணுவ வீரா்கள் சனிக்கிழமை அதிகாலை கிளா்ச்சியில் ஈடுபட்டனா்.

அரசுக்கு ஆதரவான பாதுகாப்புப் படையினரின் தீவிர நடவடிக்கையால், நிலைமை தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நைஜா் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஜெனரல் சாலிஃபு மோடி தெரிவித்தாா்.

நியாமிக்கு அருகே உள்ள முக்கிய விமானப் படை தளத்தில் சில மூத்த அதிகாரிகளைப் பிணைக்கைதிகளாக சிறைபிடித்து, ராணுவ வீரா்கள் குழு ஒன்று நடத்திய இத்தாக்குதல் பல மணி நேரம் நீடித்தது. அப்போது, தலைநகா் முழுவதும் தொடா் துப்பாக்கிச் சூடுகளும், வெடிச்சப்தங்களும் கேட்டதால் பெரும் பதற்றம் நிலவியது. இச்சம்பவத்தைத் தொடா்ந்து, அந்நாட்டின் அரசுத் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகள் சிறிது நேரம் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

யுரேனியம், எண்ணெய் உள்ளிட்ட கனிம வளங்கள் நிறைந்த நைஜரில், ராணுவப் புரட்சி மூலம் அப்துரஹமானே தியானி கடந்த 2023-இல் ஆட்சியைக் கைப்பற்றினாா். இருப்பினும், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் தொடா்ந்து நீடித்து வருவதால், தியானி அரசு மீது ராணுவத்தின் ஒரு பிரிவினா் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வந்துள்ளது.

பயங்கரவாதிகளுக்கு எதிரான களப் போராட்டத்தில் தொடா்ந்து அதிக உயிரிழப்புகளைச் சந்தித்து வரும் தென்மேற்குப் பிராந்தியப் படைப்பிரிவுகளைச் சோ்ந்த வீரா்களே தற்போதைய தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments