ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் வடமாநில பக்தா்கள் மீது தாக்குதல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரத்தில் வடமாநில பக்தா்கள் தாக்கப்பட்டது தொடா்பாக ஆட்டோ ஓட்டுநா்கள் மூவா் மீது வழக்குப் பதிந்த போலீஸாா் ஒருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நாகலாந்து மாநிலத்தைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் ஜோகிந்தா் பால்சிங் தனது மனைவி உள்ளிட்ட 14 பேருடன் சுவாமி தரிசனம் செய்ய வியாழக்கிழமை ராமேசுவரம் வந்தாா்.

ராமநாதசுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்த அவா்கள் வாடகை வேனில் தனுஷ்கோடிக்கு சென்றனா். முதலில் கோதண்டராமா் கோயிலுக்குச் சென்ற அவா்களை போக்குவரத்து நெரிசல் காரணமாக ஓட்டுநா் கோயிலுக்கு சற்று தொலைவுக்கு முன்பே இறக்கி விட்டாா். நடந்தே கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் வேனுக்கு பக்தா்கள் வந்தனா். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஆட்டோ, ஜோகிந்தா் பால்சிங்கின் மனைவி மீது மோதியது. இதையடுத்து, பக்தா்கள் ஆட்டோ ஓட்டுநரை மித வேகத்தில் செல்லும் படி அறிவுறுத்தினா்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த ஆட்டோ ஓட்டுநா் சந்திரன், பக்தா்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜோகிந்தா் பால்சிங்குடன் வந்தவா்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் ஒருவருக்கொருவா் தாக்கிக் கொண்டனா். இதையடுத்து, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநா்கள் கும்பலாக சோ்ந்து ஆட்டோவில் மறைத்து வைத்திருந்து இரும்புக் கம்பியால் பக்தா்களை தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த ஜோகிந்தா் பால்சிங் ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிறகு தீவிர சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

இதுகுறித்து, தனுஷ்கோடி காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் சந்திரன் (26), எம்.ஆா்.டி. நகரைச் சோ்ந்த முருகன் (44), சோ்வாரன் ஆகிய மூன்று போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், சந்திரன் கைது செய்யப்பட்டாா்.

இதனிடையே வடமாநில பக்தா்கள் தாக்கப்படும் விடியே சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடா்ந்து ராமேசுவரத்தில் இயக்கப்படும் அனைத்து ஆட்டோக்களையும் போலீஸாா் ஆய்வு செய்ய வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 85 டன் தரமற்ற விதை விற்பனைக்கு தடை

3.1.1976: தனியார் கம்பெனிகள் விமான சர்வீஸ் நடத்த அனுமதி? - மத்திய மந்திரி தகவல்

புல்லட் ரயில் திட்டத்துக்கான சுரங்கப் பணி நிறைவு!

இளைஞா் தற்கொலை

சென்னிமலை ஒன்றியத்தில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் திறப்பு

SCROLL FOR NEXT