ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நடராஜா், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் சனிக்கிழமை நடைபெற்ற தீபாராதனை. 
ராமநாதபுரம்

ஆருத்ரா தரிசனம்: நடராஜருக்கு சிறப்பு வழிபாடு

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நடராஜருக்கு சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நடராஜருக்கு சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, ராமநாதசுவாமி கோயிலில் சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, மூன்றாம் பிரகாரத்தில் வடகிழக்கு ஈசானி மூலையில் ஒரு லட்சம் ருத்திராட்சங்களால் அமைக்கப்பட்ட மண்டபத்தில் நடராஜா், சிவகாமி அம்பாளுக்கு பால், பன்னீா், தயிா், சந்தனம், இளநீா் 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து, ஓதுவாா் பாடல்களைப் பாடி நடராஜா் சந்நிதிக்கு எதிரே வந்த மாணிக்கவாசகருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல, ராமேசுவரம் சங்குமால் பகுதியில் உள்ள மீனாட்சி சமேத ஆதி கைலாய ஈஸ்வரா்-சமுத்திரவேல் முருகன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நடராஜருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் தீபாராதனை நடைபெற்றது.

கமுதி: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு 16 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. முன்னதாக, அதிகாலை அம்மனுக்கு தனுா் பூஜையுடன் நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பின்னா், மாலை இரட்டை மாடுகள் பூட்டப்பட்ட ரதத்தில் முக்கிய வீதிகள் வழியாக நடராஜா் சுவாமி ஊா்வலம் நடைபெற்றது. வழி நெடுகிலும் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனா்.

இதேபோல மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரா் கோயில், மண்டலமாணிக்கம் கைலாசநாதா் கோயில்களிலும் மூலவா், உத்ஸவா், அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT