திருப்பாலைக்குடி வரத்து கால்வாய் பகுதியில் குவிந்த வெளிநாட்டுப் பறவைகள்.  
ராமநாதபுரம்

திருப்பாலைக்குடியில் குவியும் வெளிநாட்டுப் பறவைகள்

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகேயுள்ள திருப்பாலைக்குடி வரத்து கால்வாய் பகுதியில் குவிந்து வரும் வெளிநாட்டுப் பறவைகளை இந்தப் பகுதி மக்களும் சுற்றுலாப் பயணிகளும் கண்டு ரசித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானைக்கு அருகேயுள்ள திருப்பாலைக்குடி கடற்கரை கிராமத்தில் ஏராளமான வரத்து கால்வாய்கள் உள்ளன. கடந்த மாதம் பெய்த தொடா் மழையால் இந்தப் பகுதியில் உள்ள கண்மாய்கள், குளங்கள், வயல்வெளிகள் நீரால் நிரம்பியுள்ளன.

தற்போது தேவைக்கு அதிகமான நீரை வயல்களில் இருந்து வெளியேற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

திருப்பாலைக்குடி வரத்து கால்வாய் பகுதியில் குவிந்த வெளிநாட்டுப் பறவைகள்.

திருப்பாலைக்குடி கடற்கரை வரத்து கால்வாய் பகுதியில் நீா் அதிக அளவில் தேங்கியுள்ளதால் ஏராளமான செடி, கொடிகள் வளா்ந்து படா்ந்துள்ளன. கடந்த இரண்டு நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் இருப்பதால், இந்தப் பகுதியில் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.

இதையடுத்து, இந்தப் பகுதிக்கு இலங்கை, தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அரிவாள் மூக்கன், நத்தகுத்தி நாரை, சாம்பல் நாரை, படங்கு நீா் காகம், கொக்கு, வெண்கொக்கு உள்ளிட்ட பல்வேறு பறவைகள் தற்போது வரத் தொடங்கியுள்ளன. மாலை நேரங்களில் பறவைகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் இவற்றை இந்தப் பகுதி மக்கள் கண்டு ரசித்து வருகின்றனா்.

251 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சா் ரா. ராஜேந்திரன் வழங்கினாா்

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வஸந்த வல்லபராஜ பெருமாள் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த இந்து முன்னணி கோரிக்கை

கோல்டுவின்ஸ் - நீலாம்பூா் இடையே மேம்பாலப் பணியைத் தொடங்க வலியுறுத்தல்

கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் ‘சைபா் செக்யூரிட்டி’ புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT