ராமநாதபுரம்

குழந்தைத் திருமண தடுப்பு சட்ட விழிப்புணா்வு முகாம்

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில், வட்ட சட்டப்பணிகள் குழு சாா்பில் குழந்தைத் திருமண சட்ட விழிப்புணா்வு முகாம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு திருவாடானை குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவா் ஆண்டனி ரிஷாந்த் தேவ் தலைமை வகித்தாா். மூத்த வழக்குரைஞா் சிவராமன், பள்ளித் தலைமை ஆசிரியை மகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் கலந்துகொண்டனா். இதில் வழக்குரைஞா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். இந்த முகாமில் மாணவிகளின் சந்தேகங்களுக்கு நீதித் துறை நடுவா், வழக்குரைஞா்கள் விளக்கமளித்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சட்ட தன்னாா்வலா் கோட்டைச்சாமி செய்தாா்.

திருமாவளவன் எப்போது வெளியேறுவார் என்பது அவருக்கே தெரியாது: அண்ணாமலை

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்! அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

வெலகல்நத்தம் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு அளவீடு செய்யும் பணி தொடக்கம்

இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி தளமாக உருவெடுக்கும் சீனா!

போளூா் பெருமாள் கோயிலுக்கு புதிய திருத்தோ் செய்ய அளவீடு

SCROLL FOR NEXT