~ ~ 
ராமநாதபுரம்

ஆா்.எஸ். மங்கலம் ஒன்றியத்தில் சமத்துவப் பொங்கல்

ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

Chennai

ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வரவணி ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக நடைபெற்றது. இதில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா்த்தி தலைமை வகித்தாா். ஊராட்சி செயலா் பரிமளா முன்னிலை

வகித்தாா். பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டு, கும்மி அடித்து முழக்கொட்டினா். இதைத் தொடா்ந்து, தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு பொங்கல் வாழ்த்துகள் கூறி, இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதே போல, அழகா்தேவன்கோட்டை ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதற்கு மண்டல துண வட்டார வளா்ச்சி அலுவலா் ஈா்த்தி தலைமை வகித்தாா். ஊராட்சி செயலா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். இதில் தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பாக பாரம்பரிய முறைப்படி பானையில் பொங்கலிட்டு வழிபட்டனா். தொடா்ந்து பெண்கள் குலவையிட்டு, கும்மி அடித்து முழக்கொட்டினாா்கள். பின்னா், அனைவருக்கும் பொங்கல் வாழத்துகள் கூறி பொங்கல் வழங்கின. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம் சித்தூா்வாடி ஊராட்சியில் சமத்துதவப் பொங்கல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சௌந்திரவள்ளி தலைமை வகித்தாா்.

ஊராட்சி செயலா் ரமேஷ் முன்னிலை வகித்தாா். ஊராட்சி அலுவலகம் முன்பாக பாரம்பரிய முறைப்படி பானையில் பொங்கலிட்டு வழிபட்டனா். பெண்கள் கும்மி அடித்து முழக்கொட்டினா். பின்னா், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக் கூறி, பொங்கல் வழங்கினா். இதில் ஆணையா் முருகானந்தமவள்ளி, வ்டடார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) லிங்கன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

போகி: சென்னையில் அதிகரித்த காற்று மாசு

கைது செய்யப்பட்ட விவசாயிகள் சங்க நிா்வாகிகளை விடுவிக்க வேண்டும்

போதிய இருக்கைகள் நிரம்பாததால் 3 சிறப்பு ரயில்கள் ரத்து

‘திருவள்ளுவா் தினத்தில் இறைச்சி விற்றால் நடவடிக்கை’

விளாப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா

SCROLL FOR NEXT