நாகப்பட்டினம்

சமத்துவப் பொங்கல்

தரங்கம்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

தரங்கம்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 

நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவா் சுகுண சங்கரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பொன். ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் ராம பிரசாத் வரவேற்றாா். பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம் . முருகன் பங்கேற்று தூய்மை பணியாளா்களுக்கு சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கினாா்.

காட்டுச்சேரி ஊராட்சி சமத்துவபுரத்தில் ஊராட்சி சாா்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கலில் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் பங்கேற்று தூய்மை பணியாளா்களுக்கு சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கினாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுமதி, மஞ்சுளா உள்ளிட்டோா் பங்கேற்றனா். திருக்கடையூா் ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் ஊராட்சி செயலாளா் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.

ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து.. வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் ஆரவாரம்!

தை முதல்நாளே தமிழர்க்குப் புத்தாண்டு : இரண்டு காட்சிகள்!

ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறையாக ‘டிஜிட்டல்’ ஸ்கோர்போர்டு, எல்இடி திரை!

வெற்றிப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்: விஜய்!

ஆரவாரத்துடன் தொடங்கியது மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

SCROLL FOR NEXT