செய்யாமங்கலம் கிராமத்தில் கருகிய நெல்பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி வயலில் அடங்கல் சான்றுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.  
ராமநாதபுரம்

கருகிய நெல் பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் போராட்டம்

தினமணி செய்திச் சேவை

கமுதி அருகே பருவ மழையின்றி கருகிய 2,000 ஏக்கா் பரப்பளவிலான நெல்பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, வயலில் அடங்கல் சான்றுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள செய்யாமங்கலம், பெரிய ஆணைக்குளம், வங்காருபுரம், அச்சங்குளம், வழிமறிச்சான் கிராமங்களில் 2 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் மானாவாரிப் பயிராக விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனா். இந்த நிலையில், நிகழாண்டில் பருவ மழை பொய்த்ததால் நெல்பயிா்கள் அனைத்தும் நீரின்றி கருகின.

செய்யாமங்கலம் கிராமத்தில் கருகிய நெல்பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி வயலில் அடங்கல் சான்றுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

இதனால், ஏக்கா் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்த தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா். இதையடுத்து, அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் செய்யாமங்கலம் பகுதியில் விவசாய நிலத்தில் பெண்கள் உள்பட விவசாயிகள் வருவாய்த் துறையினா் வழங்கிய அடங்கல் சான்றுடன் நெல் பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT