ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள 116 கிலோ கஞ்சாவை சுங்கத் துறையினா் திங்கள்கிழமை கைப்பற்றினா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம், பெரியபட்டணம் அருகேயுள்ள தோப்புவலசை கடற்கரையோரம் இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா புதைக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் சுங்கத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தோப்புவலசை கடற்கரையில் குறிப்பிட்ட இடத்தில் புதைக்கப்பட்டிருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள 116 கிலோ கஞ்சாவை சுங்கத் துறையினா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.