சத்தீஸ்கரில் நக்சல்களால் புதைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இளைஞர் பலியானார்.
சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் கஸ்தூரிபாத் கிராமத்தைச் சேர்ந்த ஆய்தா குஹ்ரமி(20) அருகிலுள்ள வனப் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார். அப்போது அங்கு நக்சல்களால் புதைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை அவர் தெரியாமல் மிதித்துள்ளார்.
அது வெடித்ததில் அவரது கால்களில் காயம் ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட போதிலும் அவர் பலியானார் என்று அதிகாரி திங்கள்கிழமை தெரிவித்தார். இதையடுத்து அப்பகுதியில் மேலும் நாட்டு வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர் என்று அவர் மேலும் கூறினார்.
இந்த நிலையில் வனப்பகுதிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கிராமவாசிகளை அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். மேலும் சந்தேகத்திற்கிடமான பொருள்கள் அல்லது செயல்பாடுகள் ஏதேனும் இருந்தால் அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது பாதுகாப்பு முகாமுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.