சத்தீஸ்கரில் இரண்டு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் இரண்டு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் இரண்டு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் இந்திராவதி ஆற்றங்கரையோர வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டது. அப்போது நடந்த என்கவுன்டரில் இரண்டு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
என்கவுன்டரைத் தொடர்ந்து, சீருடை அணிந்த இரண்டு மாவோயிஸ்டுகளின் உடல்களை பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திலிருந்து மீட்டனர். மேலும் சம்பவ இடத்திலிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. ஜனவரி 3 ஆம் தேதி, பஸ்தார் பகுதியில் இரண்டு தனித்தனி மோதல்களில் 14 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
Advertisement
Advertisement
கடந்த ஆண்டு மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 285 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தண்டேவாடா மாவட்டத்தில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில், பாதுகாப்புப் படையினர் வனப் பகுதியிலிருந்து இரண்டு குக்கர் வெடிபொருட்களை வியாழக்கிழமை மீட்டனர்.
The gunfight erupted in a forested area along the Indravati River when a joint team of security forces was conducting an anti-Naxalite operation.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.