FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நேபாள வெள்ளத்தில் 5 பேரின் உயிரைக் காப்பாற்றிய தேநீர்

நேபாளத்தில் ஆக. 26-ல் தேநீர் இடைவேளை சென்றதால் பெரு வெள்ளத்திலிருந்து 5 பேர் உயிர் தப்பிய சம்பவம் குறித்து...

பகிர்:

நேபாளத்தில் ஆக. 26-ல் தேநீர் இடைவேளை சென்றதால் பெரு வெள்ளத்திலிருந்து 5 பேர் உயிர் தப்பினர்.

ஆகஸ்ட் 26-ல் திபெத்தின் வெண்டே நதியில் உருவான பெருவெள்ளம், நேபாளத்தில் உள்ள போடே கோஷி நதி வழியாக மத்திய மாவட்டங்களுக்குள் புகுந்து பேரழிவை விளைவித்தது. மலைப் பகுதியிலிருந்து சகதி, பாறைகளுடன் இரு கரைகளையும் சூழ்ந்தபடி பல அடி உயரத்துக்குச் சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் ஏராளமான வீடுகள், கட்டமைப்புகள் கூண்டோடு அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தின் கோரத் தாண்டவம் பல கிராமங்கள் உருக்குலைந்தன. இந்த வெள்ளத்தால் இதுவரையில் 700-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இருப்பினும், ஒரு சிறு தேநீர் இடைவேளையால் இந்தப் பெரு வெள்ளத்தில் சிக்காமல் 5 பேர் உயிர் தப்பியுள்ளனர்.

Advertisement

Advertisement

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த 50 முதல் 60 வயதுக்குட்பட்ட நாராயண் சென், தினேஷ் ஓஜா, பிரேம் சிங் ஜகத், யதேந்திர பிரகாஷ், தினேஷ் சிங் தாக்கூர் ஆகியோர், ஆக. 22-ல் நேபாளத்துக்கு வாடகை வாகனத்தில் சுற்றுலா சென்றனர்.

நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற 5-வது நாளான ஆக. 26-ல் தாடிங் என்ற மாவட்டத்தில் காலை 10 மணியளவில் ஒரு விடுதியில் தேநீர் அருந்துவதற்காக அவர்கள் வாகனத்தை நிறுத்தினர். இந்த நிலையில்தான், நேபாளத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டு, அந்நாட்டையே உருக்குலைத்தது. விடுதிக்குள் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, அப்பகுதி மக்கள் அலறிக்கொண்டு ஓடுவதையும் இவர்கள் பார்த்துள்ளனர்.

அதிருஷ்டவசமாக அவர்கள் 5 பேரும் தேநீர் இடைவெளி எடுத்துக் கொண்டதால் உயிர் தப்பியதாகக் கூறினர். 5 - 10 நிமிடங்கள் முன்சென்றிருந்தாலோ விரைவாகக் கிளம்பியிருந்தாலோ அவர்களும் வெள்ளத்தில் சிக்கியிருக்கக் கூடும்.

அவர்கள் 5 பேரும் இரு நாள்களாக அவர்கள் சென்ற வாகனத்திலேயே உறங்கியும், அந்த இரு நாள்களில் வெள்ளத்தின் கோர தாண்டவத்தையும் மேலிருந்து பார்த்ததாகவும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் 5 பேரும் மீட்கப்பட்டு, சனிக்கிழமையில் (ஆக. 29) வீடு திரும்பினர்.

summary

Tea break turns lifesaver for 5 Chhattisgarh men amid Nepal floods

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments