நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோருக்கு தஞ்சையில் மெழுகுவர்த்தி அஞ்சலி!
தஞ்சையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியது பற்றி..
நேபாளம் பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி தஞ்சையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து ஆன்மிகப் பயணமாக நேபாளத்திற்கு 57 பேர் சென்ற நிலையில் அதில் 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர், மீதம் உள்ள 37 பேர் நிலை குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை.
இந்த பெரு வெள்ளத்தில் சிக்கி 300 இந்தியர்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில் நேபாளம் பெரு வெள்ளத்தில் உயிரிழந்த சகோதர, சகோதரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தஞ்சையில் பொதுமக்கள் பேரணியாக வந்து ரயில் நிலையம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர்,
மாயமான தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.